திமுகவுடன் கூட்டணி…. இரவோடு இரவாக ஸ்டாலினை சந்தித்த முக்கிய புள்ளி…. அறிவாலயத்தில் நடந்த ரகசிய மீட்டிங்….!

By Nanthini on மாசி 23, 2026

Spread the love

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் அவரைச் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி மற்றும் சத்தீஸ்கர் முன்னாள் துணை முதல்வர் டி.எஸ்.சிங் தியோ ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனையின் போது, காங்கிரஸ் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை கே.சி.வேணுகோபால் முதல்வரிடம் வழங்கியதாகத் தெரிகிறது. கடந்த தேர்தலை விட இந்த முறை கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மற்றும் தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு அதிக இடங்களைக் கேட்டுள்ளதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

   

இருப்பினும், இந்த முறை திமுக கூட்டணியில் தேமுதிக, மக்கள் நீதி மய்யம் போன்ற புதிய கட்சிகள் இணைந்துள்ளதால், தொகுதிகளைப் பகிர்ந்து அளிப்பதில் சிக்கல் நிலவுவதாக முதல்வர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றும் கடந்த முறை போட்டியிட்ட இடங்களை விட ஒரு தொகுதியை விட்டுக்கொடுக்க வேண்டும் என திமுக குழுவினர் ஏற்கனவே இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியிடம் வலியுறுத்தியிருந்தனர். இதனால், காங்கிரஸ் கேட்கும் கூடுதல் இடங்கள் கிடைக்குமா அல்லது தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.