BREAKING: தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி..? திட்டவட்டமாக தெரிவித்தார் செல்வப்பெருந்தகை..!

By Soundarya on தை 31, 2026

Spread the love

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான தகவல்களை முற்றிலுமாக மறுத்துள்ளார். “காங்கிரஸில் இருந்து தவெக-வுடன் யாரும் பேசவில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்த அவர், அத்தகைய செய்திகள் வெறும் வதந்திகளே என்று விளக்கமளித்துள்ளார்.

மேலும், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி என்பது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல, அது ஒரு கொள்கைக் கூட்டணி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டணியின் அடித்தளம் வலுவாக இருப்பதாகவும், வெளி சக்திகள் யாராலும் இதைச் சிதைத்துவிட முடியாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். செல்வப்பெருந்தகையின் இந்த அறிக்கை, தேர்தல் நெருங்கும் வேளையில் நிலவி வந்த அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது.