தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் திமுக மற்றும் அதன் நீண்டகால கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் இடையே நிலவி வந்த தொகுதிப் பங்கீடு இழுபறி ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இன்று மதியம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே அதிகாரப்பூர்வமான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகள் கேட்டு காங்கிரஸ் பிடிவாதம் காட்டிய நிலையில், தற்போது திமுகவின் நிபந்தனைகளை ஏற்று அக்கட்சி உடன்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் அரங்கேறின. ஆரம்பத்தில் 41 தொகுதிகள், 2 ராஜ்யசபா இடங்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் 20% இடங்கள் என காங்கிரஸ் பெரும் பட்டியலை வழங்கியது. ஆனால், புதிய கட்சிகளின் வருகையைக் காரணம்காட்டி திமுக கூடுதல் இடங்களை ஒதுக்க மறுத்துவிட்டது. ஒருகட்டப் பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டதால், காங்கிரஸ் கட்சி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கக்கூடும் என்ற வதந்திகளும் பரவின. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்படுமோ என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பலமாக எழுந்தது.
சூழலின் தீவிரத்தை உணர்ந்த காங்கிரஸ் மேலிடம், மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை சமரசப் பேச்சில் இறக்கியது. சோனியா காந்தியின் அறிவுறுத்தலின்படி நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், ராகுல் காந்தி குறைந்தபட்சம் 30 தொகுதிகளை எதிர்பார்த்தார். எனினும், 28 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என்பதில் திமுக திட்டவட்டமாக இருந்தது. இறுதியில், “தொகுதிகளை விட கூட்டணியும் நட்பும் தான் முக்கியம்” என்ற ப.சிதம்பரத்தின் ஆலோசனையை ஏற்று, திமுகவின் நிபந்தனைகளுக்கு காங்கிரஸ் தலைமை பச்சைக்கொடி காட்டியதாகத் தெரிகிறது.
இன்றைய ஒப்பந்தத்தின்படி, திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனுடன் ராஜ்யசபா இடத்திற்கான ஒப்பந்தமும் இன்று கையெழுத்தாகிறது. தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் பெரும்பாலானோர் திமுகவுடன் தொடர்வதையே விரும்பியதும், தவெக-வுடன் கூட்டணி வைப்பது ‘தற்கொலைக்குச் சமம்’ எனக் கருத்துத் தெரிவித்ததும் இந்த முடிவிற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் மெகா கூட்டணி உறுதியாகியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…