நீதிபதியா..? IAS அதிகாரியா..? பாவம் அவங்களே கன்பியூஸ் ஆகிட்டாங்க… தவெகவினர் ஒட்டிய போஸ்டரால் குழப்பம்..!!

By Soundarya on ஐப்பசி 3, 2025

Spread the love

தமிழக அரசை கண்டித்து தவெகவினர்  ஒட்டிய போஸ்டரில் முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசனை முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி என்று குறிப்பிட்டு இருப்பது தற்போது நகைச்சுவையை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வெற்றிக்கழகம் நடிகர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் கரூரில் கூட்ட நெரிசலில்  சிக்கிப் 41 பேர் பலியாகினார்கள். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் உட்பட 3 பேரும் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார் .

இதனை கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக திண்டுக்கல் மத்திய மாவட்ட  தவெக இளைஞர் அணி சார்பாக வத்தலக்குண்டு, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் தமிழக அரசு அமைத்திருக்கும் விசாரணைக் குழுவின் தலைவர் முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசனை  முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி என்று  தவெகவினர் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால் நீதிபதியா? IAS அதிகாரியா? என்பது கூட தெரியாமல் தாவிக்க வேணா ஒட்டிய போஸ்டர் ஆள் மற்ற கட்சியினரால் கேலிகிண்டலுக்கு உள்ளாகியுள்ளார்கள்.