திமுக குடும்பத்தில் மீண்டும் வெடித்த மோதல்..! “OPS-க்கே இடம் இருக்கு.. என் அப்பாவுக்கு இல்லையா..? அழகிரி மகள் கயல்விழி விடுத்த பகிரங்க சவால்..!!”

By Soundarya on சித்திரை 15, 2026

Spread the love

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்குள் மீண்டும் அரசியல் ரீதியான சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மு.க.அழகிரியின் மகள் கயல்விழி அளித்துள்ள சமீபத்திய பேட்டி தென் மாவட்ட அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதில், வரவிருக்கும் தேர்தல் களத்தில் தனது தந்தை அழகிரி இல்லாதது தென் மாவட்டங்களில் திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவையும், இழப்பையும் ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார். மேலும், அதிமுகவிலிருந்து பிரிந்து வந்த ஓ.பன்னீர்செல்வத்தையே (OPS) கூட்டணியிலோ அல்லது ஆதரவு நிலையிலோ சேர்க்கும் போது, கட்சியின் ரத்தமான தனது தந்தையை மீண்டும் கட்சியில் இணைக்க ஏன் தயங்க வேண்டும் என்று அவர் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் துரை தயாநிதியின் உடல்நலக் குறைவின் போது ஸ்டாலினும் அழகிரியும் சந்தித்துக் கொண்டதால், இரு குடும்பங்களும் மீண்டும் இணைந்துவிட்டதாகப் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், கயல்விழியின் இந்தப் பேச்சு மீண்டும் அவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் இன்னும் அரசியல் ரீதியாகத் தள்ளி வைக்கப்படுவதையே கயல்விழியின் ஆதங்கம் உணர்த்துவதாகவும், இது தென் தமிழகத்தில் திமுகவின் தேர்தல் வெற்றியைப் பாதிக்குமா என்ற கோணத்தில் பரபரப்பான விவாதங்கள் தொடங்கிவிட்டன.