சி.வி. சண்முகத்தின் ஆட்டம் க்ளோஸ்?…. கை கட்டி வேடிக்கை பார்க்கும் எடப்பாடி…. பின்னணியில் இருக்கும் ரகசிய பிளான்….!

By Nanthini on ஆவணி 16, 2026

Spread the love

அதிமுகவில் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகிக்கும் சி.வி. சண்முகத்தின் அண்மைக்கால அதிருப்திப் பேச்சுக்கள் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும், எடப்பாடி பழனிசாமி அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவணையின்படி, ஒரு மக்கள் பிரதிநிதி அவராகவே முன்வந்து தனது தாய் கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைந்தால் மட்டுமே கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவருடைய பதவி பறிபோகும்.

மாறாக, கட்சியே அவரை நீக்கினால், அவர் தனது எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. பதவியை இழக்காமல் தவெக போன்ற மாற்று அணியில் இணைய வழிவகை ஏற்படுகிறது. இந்தச் சட்ட நுணுக்கத்தின் காரணமாகவே, பதவியைப் பறிக்க முடியாத சூழலில் அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்து அவரைப் பலப்படுத்துவதை விட, தற்போதைக்கு அமைதி காப்பதே உசிதம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கருதுவதாகக் கூறப்படுகிறது.