“தேர்தலை ரத்து செய்”…. ஸ்டாலின், உத்தவ் தாக்கரே போட்ட வெடி…. தவெக ஆட்சிக்கு ஆபத்தா?…. தமிழக அரசியலில் அடுத்தடுத்து நடக்கும் உச்சக்கட்ட பரபரப்பு….!

By Nanthini on புரட்டாதி 24, 2026

Spread the love

SIR விவகாரத்தில் தங்களுக்குத் தெரியாமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறி, தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் 14 முறை தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்த செய்தி தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவலைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஸ்டாலினும், முறைகேடுகளுக்கு இடமளிக்கும் வகையில் உள்ளதால் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும் என உத்தவ் தாக்கரேவும் காரசாரமாக வலியுறுத்தியுள்ளனர்.

இத்தகைய கொந்தளிப்பான அரசியல் சூழலில் ஒருவேளை தேர்தல்கள் ரத்து செய்யப் பட்டாலோ அல்லது தள்ளிவைக்கப்பட்டாலோ, அது தீவிரமாகக் களம் கண்டுவரும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக்கு பெரும் ஆபத்தையும் சவாலையும் உருவாக்கக்கூடும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.