BREAKING: வாக்கு எண்ணிக்கையை நிறுத்தம்?… கடைசி நேரத்தில் தமிழகத்தில் பரபரப்பு…!

By Nanthini on சித்திரை 28, 2026

Spread the love

மேலூர் சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கையை உடனடியாக நிறுத்தக்கோரி சுயேச்சை வேட்பாளர் முருகன் இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிரடியாக புகார் அளித்துள்ளார். விவசாயிகள் ஆதரவுடன் ‘கம்ப்யூட்டர்’ சின்னத்தில் களம் கண்ட அவர், அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை முற்றிலுமாக மீறி வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு ₹1,000 முதல் ₹3,000 வரை பணப்பட்டுவாடா செய்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கான வலுவான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், பணபலத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை விலைபேசிய இந்தச் சூழலில் வாக்கு எண்ணிக்கையை நடத்துவது நியாயமற்றது என்றும் அவர் தனது புகாரில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விவகாரம் மேலூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.