Categories: சினிமா

தில்லாலங்கடி வேலை பார்த்த ஹரிஷ் கல்யாண் பட நடிகை.. ஏமாந்து போன தயாரிப்பாளர்.. எஃப்ஐஆர் பதிவு செய்த பரபரப்பு சம்பவம்..!

Spread the love

ஹரிஷ் கல்யாண் பட நடிகை திகழ்ந்த திகங்கனா சூர்யவன்ஷி தயாரிப்பாளரை ஏமாற்றி விட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்தியில் ஃப்ரைடே, தெலுங்கில் ஹிப்பி உள்ளிட்ட திரைப்படத்தின் மூலமாக நடித்த அறிமுகமானவர் நடிகை திகங்கனா சூர்யவன்ஷி.  இவர் தமிழில் தனுசு ராசி நேயர்களே என்ற திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்து அறிமுகமானார். அதனை தொடர்ந்து பெரிய அளவு வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் வெப் சீரிஸ்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

தற்போது பிரபல இந்திய நடிகர் ஜீனத் அம்மன் உடன் இணைந்து ஷோ ஸ்டாப்பர் என்ற வெப் தொடரில் நடித்திருக்கின்றார். இந்த தொடரில் நடிப்பதற்காக அவருக்கு 27 லட்சம் சம்பளமாக தரப்பட்டு விட்டது. அதற்குப் பிறகும் தனக்கு அதிக பணம் வேண்டும் என்று திட்டம் போட்ட நடிகை திகங்கனா சூர்யவன்ஷி ஒரு மோசடியை அரங்கேற்றி இருக்கின்றார்.

அதாவது தனக்கு பாலிவுட்டில் ஷாருக்கான் தெரியும், சல்மான்கான் தெரியும், அக்ஷய் குமாரை தெரியும் என்று ஷோ ஸ்டாப்பர் படத்தின் இயக்குனர் மனிஷ் ஹரிசங்கர் மற்றும் தயாரிப்பாளரை ஏமாற்றி வந்துள்ளார். அதில் ஒரு படி மேலே சென்று இந்த வெப் தொடரை அக்ஷய் குமார் மூலமாக பிரபலப்படுத்தி விடலாம் என்று தயாரிப்பாளர்க்கும் இயக்குனருக்கும் ஆசை வார்த்தை கூறி இருக்கின்றார்.

இதை நம்பிய இயக்குனரோ சீரியஸாக எடுத்துக் கொண்டு தனது வெப் சீரியஸை எப்படியும் மக்களிடம் வெற்றி பெற செய்துவிடலாம் என்று எண்ணி இருக்கின்றார். இதற்காக தனக்கு அதிக அளவு பணம் கொடுக்க வேண்டும் என்று அந்த நடிகை கேட்க அவருக்கு 75 லட்சமும், அக்ஷய் குமார் பெயரில் 6 கோடி ரூபாயும் கொடுக்க வேண்டும் என்று பட்ஜெட்டுக்கு மீறி அதிக அளவு பணம் கேட்டிருக்கின்றார்.

மேலும் அக்ஷய் குமாரிடம் இந்த வெப் சீரியஸை போட்டுக்காட்ட வேண்டும் என்று கூறி அந்த முழு எபிசோடும் இருந்த ஐபேடை இயக்குனரிடம் இருந்து சாமர்த்தியமாக வாங்கி சென்றிருக்கின்றார். பின்னர் நடிகை திகங்கனாவின் திருட்டு வேலை அனைத்தும் இயக்குனர் மணிஷ் ஷங்கருக்கு தெரிய வரவே அவர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

சினிமாவில் படங்களே இல்லாமல் தவித்து வந்த திகங்கனா சூர்யவன்ஷிக்கு வெப் தொடரில் வாய்ப்பு கொடுத்த அவருக்கு துரோகம் செய்ய நினைத்திருக்கின்றார். அந்த நடிகை பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளதாகவும் அந்த புகாரில் இயக்குனர் தெரிவித்து இருக்கின்றார். காவல்துறையினர் அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்திருக்கின்றார்கள். கதாநாயகியாக நடித்து வந்த திகங்கனா சூர்யவன்ஷி தற்போது இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் வில்லியாக மாறி இருக்கின்றார். இந்த சம்பவம் தற்போது பாலிவுட்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mahalakshmi

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

3 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

3 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

3 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

4 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

4 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

4 மணத்தியாலங்கள் ago