ஒன்றாக கூடிய போட்டியாளர்கள்!… அம்மா அப்பா பற்றி பேசி உருக்கம்!… கண்ணீரும் கவலையுமாய் வெளிவந்த பிரமோ இதோ!…

ஒன்றாக கூடிய போட்டியாளர்கள்!… அம்மா அப்பா பற்றி பேசி உருக்கம்!… கண்ணீரும் கவலையுமாய் வெளிவந்த பிரமோ இதோ!…

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றைய நாளுக்குரிய இரண்டாவது ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்போது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சி ஐந்து சீசன்களை கடந்து தற்போது ஆறாவது சீசனில் காலடி எடுத்து வைத்துள்ளது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்பொழுது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

வாரம் ஒரு போட்டியாளர் என ஜிபி முத்து, சாந்தி மாஸ்டர், அசல் கோலார், ஷெரினா, விஜே மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி என மொத்தம் 11 போட்டியாளர்கள் தற்பொழுது வரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பிக் பாஸ் டைட்டிலை வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்றைய நாளின் இரண்டாவது பிரமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் போட்டியாளர்கள் தங்களுடைய அம்மா அப்பா பற்றி கண்கலங்கியவாறு பேசுகின்றனர். அதாவது ஏடிகே கூறுகையில் “என் அம்மா அப்பா நீ என்ன பண்ணுறாய், எதுவுமே கொடுக்க மாட்டேங்குறாய் என என் அம்மா அப்பா இதுவரை கேட்டதில்லை” எனக் கூறுகின்றார்.

அத்தோடு விக்ரமன் “கஷ்டப்படாத ஒரு நிலைமை எனக்கு வந்திருக்கு என்றால் அதற்கு காரணம் என் அம்மா அப்பா தான், அவர் இல்லைனா நான் இல்லை” எனக் கூறுகின்றார். அதேபோல் மைனாவும் ”அம்மா, அப்பாவை சேர்ந்து ஒரு நாளுமே பார்த்தது இல்லை” எனக் கூறி அழுகின்றார். இவ்வாறு கண்ணீரும் கவலையுமாய் இன்றைய நாளின் இரண்டாவது பிரமோ வெளியாகி உள்ளது.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ…

Begam