ரூபாய் நோட்டுகள் தொடர்பான செய்திகள் அடிக்கடி இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றது. பல்வேறு அறிவிப்புகளையும் விதிமுறைகளையும் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகின்றது. இந்தியாவில் தற்போது பத்து ரூபாய் முதல் 500 ரூபாய் வரை ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இவ்வாறு புழக்கத்தில் இருக்கும் 100 மற்றும் 200 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் தான் ஏடிஎம்களில் கிடைக்கின்றன. ஆனால் அனைத்து ஏடிஎம்களிலும் இந்த ரூபாய் நோட்டுகள் கிடைப்பது கிடையாது. பல ஏடிஎம்களில் 500 ரூபாய் நோட்டுகள் தான் வருகிறது. இது பொது மக்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.
ஏனென்றால் வங்கி கணக்கில் 500 ரூபாய்க்கு குறைவாகவோ அல்லது 100 ரூபாய்க்கு குறைவாகவோ பேலன்ஸ் இருந்தால் அவர்களால் எடுக்க முடியாமல் போகின்றது. பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே ஏடிஎம்மில் வைக்கப்படுவதால் ஏழை எளிய மக்களால் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களை ஏடிஎம்களிலிருந்து பெற முடியாமல் போய்விடுகிறது. இப்படியான சூழலில் ஏடிஎம்களிலிருந்து பணம் எடுப்பது தொடர்பாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.அதாவது மக்களுடைய பண பரிவர்த்தனையை எளிதாக்கவும் பணம் எடுப்பதில் உள்ள சிரமங்களை குறைப்பதற்கும் அனைத்து வங்கிகள் மற்றும் ஒயிட் லேபிள் ஏடிஎம் ஆப்ரேட்டர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு கேசட்டிலிருந்து நூறு ரூபாய் அல்லது 200 ரூபாய் மதிப்புள்ள நோட்டுக்களை வைக்க வேண்டும்.
வழக்கமாக ஒரு ஏடிஎம்மில் நான்கு கேசட்டுகள் இருக்கும். இதில் ஒன்றிலாவது 100 ரூபாய் அல்லது 200 ரூபாய் நோட்டுக்களை நிரப்ப வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 30ம் தேதிக்குள் 75 சதவீதம் ஏடிஎம்களில் குறைந்தது ஒரு கேசட்டில் 100 ரூபாய் அல்லது 200 ரூபாய் நோட்டுகள் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் 90% ஏடிஎம்களில் குறைந்தது ஒரு கேசட்டில் 100 ரூபாய் அல்லது 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாட் தாலுகாவின் மெட்பூர் கிராமத்தில், வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததற்காக 21…
மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள படாரியா சாண்டா கிராமத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜேந்திர…
மும்பை புறநகர் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 20 வயது இளம்பெண் ஒருவர், சக பயணியால் ரயிலில் இருந்து…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள காவல் புறக்காவல் நிலையம் அருகே, மூன்று இளைஞர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து 17…