நாம் என்னதான் நம் வீட்டில் இருக்கும் தோசை கல்லை நன்கு சோப்பு போட்டு கழுவினாலும் தோசை கல்லின் ஓரங்களில் எண்ணை பிசுக்கு அப்படியே இருந்து கொண்டே இருக்கும். அது அப்படியே கருப்பாக மாறிப் போய்விடும். அதன் அடிப்பகுதியிலும் நிறைய துரு இருக்கும். இதனைத் தொடர்ந்து அடுப்பில் வைத்து அதிக சூட்டில் வைத்து தோசை ஊற்றும்போது விடாப்பிடியான கரையாக மாறிப் போய்விடும். நிறைய பேர் அதை சரி செய்யாமல் அப்படியே பயன்படுத்துவார்கள். ஏனென்றால் அதை சரி செய்வதே மிகவும் சிரமம் என்ற ஒரே காரணம்தான். இனி இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி அந்த கரையை ஈசியா போக்குங்க. தோசைக்கல்லின் அடிப்பகுதியில் இருக்கும் விடாப்பிடியான துரு கரையை நீக்குவதற்கு எலுமிச்சை சாற்றை பயன்படுத்தலாம்.
தோசைக்கல்லில் இரண்டு பகுதிகளிலும் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதை நன்கு தேய்த்து விடவும். பிறகு பத்து நிமிடம் கழித்து கம்பியால் ஆன மெட்டல் ஸ்க்ரப்பரை பயன்படுத்தி நன்கு தேய்த்து விடுங்கள். பின்னர் பாத்திரம் கழுவும் லிக்விட் பயன்படுத்தி தெரித்துக் கழுவினால் இரண்டு புறமும் உள்ள துருக்கள் ஓரளவிற்கு வந்துவிடும். அதன் பிறகு நன்கு துடைத்துவிட்டு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி இரண்டு புறமும் தடவ வேண்டும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடு செய்யவும். நன்றாக சூடு ஏறியதும் ஒரு மொத்தமான துணியால் தோசை கல்லை பிடித்துக் கொண்டு தோசை திருப்பும் கரண்டியால் கரைகள், எண்ணெய் பிசுக்குகள், துரு ஆகியவற்றை நன்கு சுரண்டி எடுக்க வேண்டும்.
சூடு ஆறிவிட்டால் மீண்டும் சூடு செய்து அப்படியே செய்ய வேண்டும். இதை செய்து முடித்த பிறகு நன்கு சோப்பு போட்டு கழுவவும். இப்படி செய்தால் தோசைக்கல் பளபளப்பாக மாறிவிடும். அதனைப் போலவே நான்ஸ்டிக் தோசை கல்லை சுத்தம் செய்ய இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் அளவு கோதுமை மாவு அல்லது அரிசி மாவை கல் முழுவதும் பரப்பி பத்து நிமிடங்கள் நன்கு கைகளால் தேய்த்து பரப்பிவிட்ட பிறகு ஒரு துணியால் நன்கு துடைத்து விடுங்கள். பிறகு லேசாக கல்லை சூடு படுத்தி மேலே சொன்ன வழிகாட்டுதல்களை பயன்படுத்தி தேய்த்து கழுவினால் கறைகள் நீங்கிவிடும்.
20 வருடங்கள் பழைய தோசைக்கல்லாக இருந்தாலும் சரி அதில் உள்ள அனைத்து விடாப்பிடியான கரைகளையும் போக்க எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலவையை பயன்படுத்தலாம். தோசைக்கல்லில் இரண்டு ஸ்பூன் அளவு உப்பு தூவி நன்கு பரப்பிவிட்டு சிறிது வெந்நீர் ஊற்றி ஊற விட வேண்டும். பத்து நிமிடங்கள் ஊறியதும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விட்டு அப்படியே மூடி வைக்கவும். பிறகு ஸ்கிரப்பர் பயன்படுத்தி நன்கு தேய்த்து கழுவி விட்டு மீண்டும் ஒருமுறை பாத்திரம் தேய்க்கும் சோப்பு அல்லது லிக்விட் கொண்டு தேய்த்து கழுவினால் நீங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு உங்கள் வீட்டு தோசைக்கல் புதிதாக மாறிவிடும்.
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த 55 வயது ஓய்வுபெற்ற ரயில் ஓட்டுநர்…
யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள புவனகிரி பெரிய குளத்திற்கு அருகே, இளம்பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில்…
கேரள மாநிலம் வயநாட்டில், மத வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்தை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. 85 வயதான கல்யாணி அம்மா…