இடைத்தேர்தலில் சீமான் நின்றால்… விசிக காலியாகுமா…? திருமாவளவனின் திடீர் அச்சத்தின் பின்னணி என்ன…? தமிழக அரசியலில் வெடித்த ‘பொதுவேட்பாளர்’ சர்ச்சை…!

Spread the love

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களுக்கு மத்தியில், தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு காலியாகியுள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தவெக-விற்கு எதிராகத் திமுவினர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானைப் பொதுவேட்பாளராக நிறுத்தத் திட்டமிட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கலைஞர் கருணாநிதியின் பேனா சின்னத்தை உடைப்பேன் என்று பேசிய சீமானுடன் இன்று திமுகவினர் கொஞ்சிக்குலாவி வருவதாக அவர் வைத்துள்ள விமர்சனம், சமூக வலைதளங்களில் திமுக ஆதரவாளர்களின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது.

இதேவேளையில், விசிக முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு திமுகவில் இணைந்தது குறித்து திருமாவளவன் அதிருப்தி வெளியிட்டிருந்த நிலையில், அதற்கு நெட்டிசன்கள் மற்றும் திமுக தரப்பிலிருந்து எதிர்விமர்சனங்கள் எழுந்துள்ளன. “கூட்டணியில் நீண்ட காலம் இருந்த விசிகவிலிருந்து பாபுவை திமுக சேர்த்திருக்கக் கூடாது” என்று திருமா கூறுவது சுயநலம் என்றும், திமுகவிலிருந்து ஆதவ் அர்ஜுனா விசிகவிற்குச் சென்றபோது திருமாவளவன் ஏன் சேர்த்துக் கொண்டார் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கூட்டணி உறவுகள் மாறிய பிறகு, திமுக யாருடன் இணைகிறது அல்லது பொதுவேட்பாளராக யாரை நிறுத்துகிறது என்பதில் திருமாவளவனுக்கு என்ன கவலை என்ற ரீதியிலும் விமர்சனக் கணைகள் பாய்ந்து வருகின்றன.

இந்த ஒட்டுமொத்தப் பதற்றத்தின் பின்னணியில் விசிகவினர் மத்தியில் ஒருவித அரசியல் அச்சம் நிலவுவதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தவெக-வின் எழுச்சியால் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு விஜய் பக்கம் சாய்வதைப் போல, ஒருவேளை இடைத்தேர்தலில் திமுக அல்லது சீமான் வென்றுவிட்டால், விசிகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பனையூர் பாபுவைப் போல திமுகவை நோக்கியோ அல்லது நாம் தமிழர் கட்சியை நோக்கியோ நகர்ந்துவிடுவார்களோ என்ற பயத்திலேயே திருமாவளவன் இவ்வாறு பேசி வருவதாக அரசியல் விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Swetha

Recent Posts

செங்கடலில் வெடித்த பேரதிர்ச்சி…! சவூதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பின் ஏவுகணை தாக்குதல்…! சவூதி அரேபியாவுக்கு விழுந்த மெகா அடி…!!

செங்கடலில் சவூதி அரேபிய துறைமுகங்களுக்குச் செல்லும் வணிகக் கப்பல்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளை மீறியதாகக் கூறி, 'என்சீலியா' மற்றும் 'லைலா'…

3 minutes ago

“இது வெறும் டிரைலர் தான்.. இனிமேதான் மெயின் பிக்சர் இருக்கு”… மத்திய அரசுக்கு கரப்பான் பூச்சி ஜனதா பரபரப்பு எச்சரிக்கை…!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர்…

7 minutes ago

“என்ன விட்டுரு மா…” அலறி துடித்த மாமியார்…!! கத்தியால் குத்தி தரதரவென இழுத்து வந்த மருமகள்…. பதற வைக்கும் வீடியோ…!!

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் சிகல்குடா பகுதியில் உள்ள எருகள வஸ்தி பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக விஜயலட்சுமி என்ற பெண்…

13 minutes ago

BREAKING: காலையிலேயே ஷாக் நியூஸ்… உச்சம் தொட்ட தங்கம்… இனி அவ்ளோதான்… ரூ.1,08,000-ஐ தாண்டிய தங்கம் விலை…!

சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் உயர்வு காரணமாக, உள்நாட்டிலும் அதன் விலை இன்று (ஜூலை 23) அதிரடியாக…

15 minutes ago

ரூ. 100 கோடி கோயில் நிலம் வெறும் 2 கோடிக்கு விற்பனையா?… பழனியில் வெளிச்சத்திற்கு வந்த பகீர் சம்பவம்… அமைச்சர் ரமேஷ் வெளியிட்ட அந்த ஒரு அறிவிப்பு…!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை முழுமையாக ஆய்வு செய்து பாதுகாக்கும் பொருட்டு, இந்து சமய அறநிலையத்துறை…

54 minutes ago

“ஐயோ.. எங்க போய் சொல்ல”…. “உலகத்துலயே இப்படி ஒரு அமைச்சரா?”…. தலையில அடித்துக் கொண்ட நயினார் நாகேந்திரன்… ப்ரஸ் மீட்டில் கலகல…!

சமீபத்தில் வெளியான நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தைக் காண்பதற்காக, முதல்வர் விஜய்யிடம் அமைச்சர் விக்னேஷ் 3 மணி நேரம் பணி…

1 மணத்தியாலம் ago