CINEMA
‘வடிவேலு ரொம்ப மட்டமான ஆளு.. அவரை மாதிரி கேவலமான மனிதர் யாருமே கிடையாது’.. வெளிப்படையாக பேசிய உடன் நடித்த காமெடி நடிகை..
தமிழில் பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்தவர் பிரேமா பிரியா. வடிவேலு, கஞ்சா கருப்பு, விவேக் போன்றவர்களின் காமெடி காட்சிகளில் பிரேமா பிரியா நடித்துள்ளார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவர் கூறியதாவது, வடிவேலுவின் காமெடி குரூப்பில் இருந்தவர் போண்டாமணி.
பல படங்களில் அவருடன் நடித்திருக்கிறார். அவர் இறந்த போது வடிவேலு வரவில்லை. அவரை வளர்ந்துவிட்ட ஏணி விஜயகாந்த். அவர் ஆதரவு இல்லை என்றால் சின்னக்கவுண்டர் படத்தில் வடிவேலு நடித்திருக்க முடியாது அவர் மறைவுக்கும் வடிவேலு வரவில்லை.
அப்படி மறைவுக்கு வந்தால் பிரச்னை என்று பயந்திருந்தால், ஒரு வீடியோ வெளியிட்டு கேப்டன் மறைவுக்கு வடிவேலு அஞ்சலி செலுத்தியிருக்கலாம். அதையும் செய்யவில்லை. வடிவேலு அம்மா இறந்த போது, உடல் நலம் இல்லாத போண்டாமணி, மதுரைக்கு சென்று வடிவேலு அம்மா மறைவுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, வடிவேலுவிடம் துக்கம் விசாரித்து விட்டு வந்தார். அதே போண்டாமணி இருந்த போது வடிவேலு வரவில்லை. இதுதான் ஒரு மனிதனின் தன்மையா, இதுபோன்ற கேவலமான மனிதன் யாராவது இருப்பாங்களா?
வடிவேலு சிறந்த நகைச்சுவை கலைஞன். திறமைசாலி என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அவரை போல மகா மட்டமான ஆள், கேவலமான ஜென்மம் யாருமே இருக்க மாட்டார்கள். ஒரு நேர்காணலில், என்னிடம் சண்டை போட்டவன் எல்லாம் சுகர், நெஞ்சுவலின்னு ஆஸ்பத்திரியில் கிடக்கிறான். ஆனால், நான் நல்லா சவுக்கியமாக இருக்கிறேன், என தெனாவெட்டாக சொல்கிறார்.
இப்படிபட்ட ஒரு கேவலமான கெட்டப்புத்தி யாரிடமும் இருக்காது. எதிரியாக இருந்தாலும், இறந்தவன் குறித்து துக்கம் விசாரிப்பதுதான் மனித பண்பாடு. அந்த பண்பு இல்லாத மனிதரான வடிவேலு, மனித பிறப்புக்கே அடையாளம் இல்லை. மனித தன்மையே இல்லாதவர் என்று ஆவேசமாக பேசியிருக்கிறார் நடிகை பிரேமா பிரியா.