தமிழ் சினிமாவில் முற்போக்கு சிந்தனைகளுடன் திரைப்படங்களை கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் தான் எம் ஆர் ராதா. நாடக நடிகராக இருந்து சினிமாவில் காமெடி, குணச்சித்திரம், ஹீரோ மற்றும் வில்லன் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்றவர். அதே சமயம் பல நடிகர்களுக்கு முன்னோடியாகவும் இவ்வாறு திகழ்ந்துள்ளார். எம்ஜிஆர் மற்றும் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வில்லனாகவும் இவர் நடித்துள்ளார். எம் ஆர் ராதா சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த போதும் நாடகங்களில் நடிப்பதை விடவில்லை. அதன்படி ஒரு முறை இராமாயணத்தை கிண்டல் செய்து ஒரு நாடகத்தை இவர் நடத்தினார்.

அந்த நாடகத்தைப் பார்த்த மக்கள் பலரும் தங்கள் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது என்று கூறி வந்த நிலையில் ஒரு சிலர் எம்ஆர் ராதாவிடமே நாடகம் எங்களுக்கு மனதை காயப்படுத்தும் வகையில் உள்ளது என்று கூறிவிட்டனர். இதனை ஏற்றுக் கொண்ட எம் ஆர் ராதா அடுத்த நாள் இந்த நாடகத்தை பார்க்க வருகிறவர்கள் வரலாம் ஆனால் தங்கள் மனம் புண்பட்டுள்ளதாக உணரும் எவரும் இந்த நாடகத்தை பார்க்க வர வேண்டாம், அவர்களின் காசு எனக்கு வேண்டாம், இதை பொருட்படுத்தாமல் நாடகத்தை நீங்கள் பார்க்க வந்து உங்கள் மனம் புண்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்று ஒரு போஸ்டரை அடித்து ஒட்டி உள்ளார். அதே அளவுக்கு முற்போக்கு சிந்தனையுடன் இருந்த எம் ஆர் ராதா ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்தார்.

அதன்படி இவர் நடித்த திரைப்படம் தான் ரத்தக்கண்ணீர். தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படம். இந்த படம் பெரிய வெற்றியாக அமைந்தாலும் அதன் பிறகு எம் ஆர் ராதாவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் நாடகங்களில் நடிக்க தொடங்கிய எம் ஆர் ராதா அதில் கவனம் செலுத்தினார். அதே சமயம் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரும் தயாரிப்பாளருமான விகே ராமசாமி ஒரு படத்திற்கு கதை எழுதி அதை தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

அதனை தெரிந்து கொண்டால் எம்.ஆர்.ராதா வி.கே ராமசாமிக்கு ஒரு கடிதமும் எழுதினார். சினிமாவில் வெற்றி இல்லை, நாடகத்தை நடத்திக் கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை உங்கள் படத்தில் எனக்கு கட்டாயம் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று எழுதியுள்ளார். இதனை படித்த ராமசாமி அந்த படத்தில் வேறு ஒருவர் நடிக்க வேண்டிய கேரக்டரில் எம் ஆர் ராதாவின் நடிக்க வைத்துள்ளார். இந்த படம் பெரிய வெற்றியைப் பெற்று ரத்தக்கண்ணீர் படத்திற்கு பிறகு எம் ஆர் ராதாவுக்கு மீண்டும் வெற்றியை பரிசாக கொடுத்தது. அந்தப் படம் தான் நல்ல இடத்தை சம்பந்தம்.
