2000 மேடை நாடகங்கள், 200- க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து காணாமல் போன வடிவேலு பட காமெடி நடிகர்.. தமிழ் சினிமா ஒதுக்கிய பிரபலம்..!

By Nanthini on வைகாசி 8, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் வந்து சென்றாலும் அதில் ஒரு சிலர் மட்டுமே நிலை நாட்ட முடிகிறது. சிலர் என்னதான் தங்களுடைய திறமைகளை வெளிகாட்டினாலும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடுகின்றனர். அதிலும் குறிப்பாக சிறு சிறு துணை கதாபாத்திரங்கள் மற்றும் காமெடியில் நடித்த நடிகர்கள் பலரும் வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவில் இருந்த காணாமல் போய்விட்டனர். அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் டெலிபோன் ராஜ். அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் என்ற வசனத்தின் மூலம் பிரபலமானவர்தான் டெலிபோன் ராஜ். இவர் பெரும்பாலும் வடிவேலு குழு உடன் இணைந்து தான் படங்களில் நடித்திருக்கின்றார். திறமை இருந்தும் சினிமாவில் காணாமல் போன நடிகர்களில் இவரும் ஒருவர்.

Comedy Actor Telephone Raj About Vadivelu | வடிவேலு

   

ன்னுடைய 17 வயதில் கன்னியாகுமரியில் இருந்து சினிமா மீது கொண்ட ஆசையால் சென்னைக்கு வந்துள்ளார். பல நிறுவனங்களில் தேடியும் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காததால் முதலில் தொலைபேசி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து டெலிகாம் பணியாளராக பணியாற்றினார். வேலை பார்த்துக் கொண்டே 1992 ஆம் ஆண்டு மேடை நாடகம் ஒன்றை எழுதி அதில் இவரே நடிக்க அதனைப் பார்த்து வியந்த இயக்குனர் மௌலி தன்னுடைய படத்தில் இவருக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த படத்தில் நடித்த பிறகு சுமார் பத்து ஆண்டுகள் மௌலி உடன் பயணித்து பல நாடகங்களில் நடித்தார். அதன் பிறகு வடிவேலுவுடன் இணைந்து அன்பு என்ற திரைப்படம் மூலம் காமெடி நடிகராக சினிமாவில் நுழைந்தார்.

   

ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம்  இல்ல"- டெலிபோன் ராஜ் பேட்டி| telephone raj interview for suzhal 2 - Vikatan

 

 

அந்தப் படத்தில் வடிவேலுவுடன் கிடைத்த நட்பு காரணமாக தொடர்ந்து வடிவேல் காமெடி குழுவில் சேர்ந்த டெலிபோன் ராஜ் தொடர்ந்து பல திரைப்படங்களில் வடிவேலுவுடன் பயணித்தார். குறிப்பாக அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் என்ற காமெடி மூலம் புகழ்பெற்ற டெலிபோன் ராஜ் குசேலன் மற்றும் 23ஆம் புலிகேசி என 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 50க்கும் மேற்பட்ட சீரியல்கள் மற்றும் 2000க்கும் மேற்பட்ட நாடகங்கள் என திரை உலகில் பயணித்துள்ளார். 30 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் நடித்தும் திறமை இருந்தும் இவருக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. தற்போது இவர் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கின்றார். இவர் சமீபத்தில் சுழல் என்ற வெப் சீரிஸில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு கிடைக்குது எங்களைப் போன்ற ஆட்களுக்கு அங்கீகாரம் இல்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.