உடல் நலக்குறைவால் திடீரென மரணம் அடைந்த ‘அசத்தப்போவது யாரு’ காமெடி நடிகர்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…

By Begam on பங்குனி 21, 2023

Spread the love

சின்னத்திரையில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பல கலைஞர்கள் தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமாகி உள்ளனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மிமிக்ரி கலைஞர் கோவை குணா. இவர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்.

   

பழம்பெரும் நடிகர் எம் ஆர் ராதா குரலில் அப்படியே பேசக்கூடிய திறமை கொண்டவர். சில ஆண்டுகளுக்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ‘அசத்தப்போவது யாரு ‘என்ற நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். இவரது காமெடிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தனது தனித்துவ உடல் மொழியால் ரசிகர்களை கவர்ந்தவர் கோவை குணா.

   

 

இவர் ‘சென்னை காதல்’ என்ற படத்தில் நடிகராகவும் நடித்துள்ளார். கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றவர் கோவை குணா. இவர் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இதை தொடர்ந்து உடல் நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி தற்பொழுது இவர் மரணம் அடைந்துள்ளார். இத்தகவலை அறிந்த ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.