வெறும் 5 ரூபாய் சம்பளம்.. என் 3 தங்கைகளையும் நான் தான் திருமணம் செய்து வைத்தேன்.. காமெடி நடிகர் கிங்காங் உருக்கம்..!

By Nanthini on ஐப்பசி 5, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர்தான் கிங்காங். இவரை தெரியாதவர்கள் யாருமே இருந்திருக்க முடியாது. இவரின் உண்மையான பெயர் சங்கர். சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான வெற்றி நடை போட்ட அதிசய பிறவி என்ற திரைப்படம் மூலம்தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவருடைய டான்ஸை பார்த்தால் கூட யாராலயும் சிரிப்பை அடக்க முடியாது. இவருக்கு சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

காமெடி நடிகர் வைகைப்புயல் வடிவேலுவுடன் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார். இவர் கலா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், நான் முதன் முதலில் நாடகத்தில் நடிக்கப் போகும்போது என்னுடைய சம்பளம் வெறும் ஐந்து ரூபாய் மட்டுமே. அதன் பிறகு நாடகங்களின் மீது ஆர்வம் வந்து மாதத்திற்கு 10 நாடகங்கள் நடிக்க செல்வேன்.

   

 

நாடகத்தில் ஒரு சிறிய பைக்குள் இருந்து தான் நான் வெளியில் வருவேன். அதனைக் கண்டு அனைவருமே சிரித்து விடுவார்கள். பிறகு என்னுடன் இருக்கும் ஒரு நபர் தான் நீ சினிமாவில் போனால் உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு என்று கூறி என்னை அனுப்பி வைத்தார். அப்படி தான் கலைப்புலி அவர்களிடம் சேர்ந்தேன். என்னுடன் பிறந்தவர்கள் ஒரு அக்கா மற்றும் மூன்று தங்கைகள். என்னுடைய மூன்று தங்கைகளையும் என் வருமானத்தில் தான் நான் திருமணம் செய்து வைத்தேன். என் வாழ்க்கையில் மனைவி, குழந்தை மற்றும் உறவுகள் என அனைத்துமே கடவுள் எனக்கு கொடுத்த வரம் என்று நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.