Categories: சினிமா

விஜயுடன் 16 வருடங்களுக்கு பிறகு இணையும் பிரபல காமெடி நடிகர்… ஸ்கூல் பீஸ்  கட்ட கூட காசு இல்லைன்னு சொன்னவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து தற்பொழுது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை பற்றிய பல்வேறு அப்டேட்டுகள் அவ்வப்பொழுது இணையத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி என்ற தெலுங்கு நடிகை கமிட்டாகியுள்ளார். நாளுக்கு நாள் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தளபதி 68 திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் இத்திரைப்படம் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, பிரேம்ஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். மேலும் இத்திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்றும், இந்த படம் விஜய்யின் பிறந்தநாள் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது. தற்பொழுது’ தளபதி 68′ திரைப்படத்தின் புது அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் விஜய் உடன் 16 ஆண்டுகளுக்கு முன் சிவகாசி, அழகிய தமிழ் மகன் போன்ற திரைப்படங்களில் நடித்த பிரபல காமெடி நடிகரான கஞ்சா கருப்பு இத்திரைப்படத்தில் காமெடி நடிகராக கமிட்டாகியுள்ளாராம்.  சமீபத்தில் கஞ்சா கருப்பு பட வாய்ப்புகள் இன்றி தனது குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ் கூட கட்ட காசு இல்லை என்று கூறியிருந்தது இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது அவரது அதிர்ஷ்டம் தான். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Begam

Recent Posts

“ஓசி பஸ், 1000 ரூபாய் கேஸ்”…. 2017 முதல் 2026 வரை நடந்ததை வெளுத்து வாங்கிய விஜய்…  சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய  CM…!

தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…

22 seconds ago

“ஆமாம், எங்களுக்கு அது தெரியாது தான்”…. திமுக ஆட்சியின் 8 ஊழல்களை மேஜையைத் தட்டிப் பட்டியலிட்ட முதல்வர் விஜய்…. அனல் பறந்த சட்டமன்ற விவாதம்….!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…

9 minutes ago

BREAKING: தவெக MLA ராஜினாமா?… சொந்த கட்சி நிர்வாகியே போட்ட வெடிகுண்டு புகாரால் பரபரப்பு…. விஜய்க்கு அடுத்த ஷாக்…!

சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…

18 minutes ago

“சபை முடிஞ்சிருச்சுன்னு டிவில பார்த்தா அமைச்சர் பேசிக்கிட்டிருக்கார” உதயநிதி வைத்த குற்றச்சாட்டு.. சபாநாயகர் கொடுத்த அதிரடி ‘ட்விஸ்ட்’..!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…

20 minutes ago

சட்டமன்றத்தில் விஜய் ருத்ரதாண்டவம்..! “Evils பற்றி Devils பேசக் கூடாது” முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சைகையைச் செய்து காட்டி முதல்வர் விஜய் அதிரடி..!!!

தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…

27 minutes ago

“கடந்த 9 மாசமா சட்டம் ஒழுங்கு DGP-யே தமிழ்நாட்டுல இல்ல” திமுக ஆட்சியின் அலட்சியத்தை அம்பலப்படுத்திய CM விஜய்…!!

சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…

30 minutes ago