Connect with us

திடீரென கைது செய்யப்பட்ட காமெடி நடிகர் ஜெயமணி… இதுதான் காரணமா…? தீயாய் பரவும் தகவல்…

CINEMA

திடீரென கைது செய்யப்பட்ட காமெடி நடிகர் ஜெயமணி… இதுதான் காரணமா…? தீயாய் பரவும் தகவல்…

 

தமிழ் திரையுலகில் மிக பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஜெயமணி. இவர் ஆரம்பத்தில் அரசு வேலையில் தான் பணியாற்றியிருந்தார். பின் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தினால் சினிமாவுக்குள் நுழைந்தார். நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த சாது என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

   

அது மட்டும் இல்லாமல் ஆரம்பத்தில் இவர் வடிவேலும் உடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். இருவரின் நடிப்பில் வரும் காமெடிகள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. அதோடு இவரை சினிமா திரையில் தூக்கி விட்டது லக்கிமேன் படம் தான்.  பின் இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற பல பிரபலங்கள் உடன் இணைந்து காமெடி நடிகராக நடித்திருக்கிறார்.

இவர் 23 வருடங்களுக்கும் மேலாக சினிமா துறையில் காமெடியான அசத்தியுள்ளார். பின்னர்  சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. தற்பொழுது இவர் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் காமெடி நடிகர் ஜெயமணியை கிண்டி காவல்துறையினர் திடீரென கைது செய்துள்ளனர். நடைப்பயிற்சியின் போது நீதிபதியை வம்பிழுத்து அடிக்க முயன்றதாக காமெடி நடிகர் ஜெயமணி மீது புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து அவரை கிண்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இத்தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Continue Reading
To Top