Categories: சினிமா

எங்கள மாதிரி நடிகர்களுக்கு 100 படங்களில் நடித்தாலும் அது மட்டும் கிடைக்காது.. ஏழ்மையில் தத்தளிக்கும் காமெடி நடிகர் கிரேன் மனோகர் எமோஷனல் பேட்டி..!

Spread the love

தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் ஒரு படம் வெற்றி பெற கதாநாயகருக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ அதனைப் போலவே காமெடி நடிகருக்கு முக்கியத்துவம் உண்டு. பல படங்களில் நடிகர்களின் காமெடிகள் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளது. அப்படி தமிழ் சினிமாவில் நாகேஷ் தொடங்கி வடிவேலு வரை ஏராளமான காமெடி நடிகர்கள் கலக்கியுள்ளனர். ஆனால் அப்படி காமெடியில் கலக்கிய நடிகர்களில் ஒரு சிலர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். சிலர் திரைப்படங்களில் வெற்றி பெற்றாலும் சில படங்களுக்கு பிறகும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டனர். அவர்களில் ஒருவர்தான் காமெடி நடிகர் கிரேன் மனோகர். தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் இவர் நடித்துள்ளார்.

இவர் தொடக்க காலத்தில் படங்களுக்கு கிரேன் தொழில்நுட்ப பணியாளராக பணியாற்றினார். அதன் பிறகு நடிக்க தொடங்கிய போது மனோகர் என்ற தன்னுடைய பெயருடன் கிரேன் என சேர்த்துக்கொண்டார். பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிப்பதற்கு முன்னதாக கே எஸ் ரவிக்குமாரின் பல படங்களில் நடித்து தனது வாழ்க்கையை தொடங்கினார். முதல் முதலில் 1993 ஆம் ஆண்டு ஒரு மலையாள திரைப்படத்தில் இவர் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு 1994 ஆம் ஆண்டு நாட்டாமை திரைப்படம் மூலமாகத்தான் இவர் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

இந்த திரைப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்து முத்து, பெரிய குடும்பம், தர்மசக்கரம், நட்புக்காக, தேசிய கீதம், நீ வருவாய் என, பாட்டாளி, சமுத்திரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். குறிப்பாக இவர் வடிவேலுவுடன் இணைந்து பெரும்பாலான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் கலக்கியுள்ளார். இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்து போக தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக ஒரு கலக்கு கலக்கினார்.

இப்படி தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கிக் கொண்டிருந்த இவர் வடிவேலு ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போக இவருக்கும் பட வாய்ப்புகள் அப்படியே குறைந்துவிட்டது. அதனால் கிடைத்த படங்களில் எல்லாம் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இறுதியாக கடந்த 2020 ஆம் ஆண்டு பொன்மகள் வந்தால் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படியான நிலையில் கிரேன் மனோகர் சமீபத்தில் அளித்த பேட்டியில், இன்று ஒரு காமெடி நடிகர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை எங்களால் 100 படங்களில் நடித்தாலும் வாங்க முடிவதில்லை. அதன் காரணமாகவே எங்களைப் போன்ற காமெடி நடிகர்களின் குடும்பம் ஏழ்மையில் தத்தளிப்பதாக கிரேன் மனோகர் மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

செந்தில்பாலாஜி கைது… சபதம் எடுத்த CM விஜய்?… திமுக ரகுபதி வீசிய அரசியல் குண்டு…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைக்க பேரம் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சிக்கியுள்ள நிலையில்,…

2 minutes ago

FLASH NEWS: அனிதா ராதாகிருஷ்ணனைத் தொடர்ந்து அடுத்த 4 விக்கெட்டுகள்?…. ஆளுநரிடம் தவெக கொடுத்த ரகசிய லிஸ்ட்… காலையிலேயே ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து ஷாக்…!

அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக திமுகவினர் கடும் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக செந்தில்…

6 minutes ago

பத்திரப்பதிவில் திடீர் மாற்றம்… அடுத்த 15 நாட்களில் மாறப்போகும் புதிய விதிமுறை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் பத்திரப்பதிவு இணையதளத்தில் சில முக்கியத் திருத்தங்களை மேற்கொண்டு வருவாய்த்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இனி நிலத்தை…

10 minutes ago

BIG BREAKING: CM விஜய் காலில் விழுந்தாலும் இடமில்லை…. இரவோடு இரவாக பரபரப்பு அறிவிப்பு..!

முன் ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…

14 minutes ago

இரவோடு இரவாக அறிவிப்பு… காலை கைது, நள்ளிரவில் ரிலீஸ்… அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் திடீர் திருப்பம்….!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (CM விஜய் எனத் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது / தற்போதைய சூழலுக்கு ஏற்ப) குறித்த அவதூறு…

17 minutes ago

அதிமுகவுக்கு விழுந்த அடுத்த அடி…. இன்று பனையூரில் அரங்கேறும் மெகா பிளான்… வரிசையாக தவெக-வில் இணையும் அதிமுக புள்ளிகள்.. அதிர்ச்சியில் இபிஎஸ்….!

தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும்…

20 minutes ago