Categories: சினிமா

மெகா ஸ்டார் மம்மூட்டியே வந்துட்டாரு, உனக்கென்ன இவ்வளவு லேட்டு.. பிரபல நடிகரை அடிக்க பாய்ந்த பாவா லக்ஷ்மணன்.. அவரே பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்…?

Spread the love

தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் பாவா லட்சுமணன். வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான காமெடிகளில் நடித்து கலக்கி இருப்பார். கலகலப்பு திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து இவர் நடித்த காட்சிகள் இன்றளவும் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகின்றன. பெரும்பாலும் இவர் வடிவேலு காம்பினேஷனில் பல திரைப்படங்களில் நடித்திருப்பார். தமிழ் சினிமா உலகில் உள்ள பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களிலும் இவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால் சில ஆண்டுகளாகவே இவர் படங்களில் பெரிதாக நடிக்கவில்லை.

தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர் பொருளாதாரம் நெருக்கடியிலும் உள்ள நிலையில் தனது நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு நடிகர் ஜீவா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் பண உதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் பாவா லட்சுமணன் சமீபத்தில் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில்,  நான் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த சமயத்தில் ஆனந்தம் படப்பிடிப்பில் ஒரு சம்பவம் நடந்தது. நான்கு அண்ணன் தம்பிகள் வைத்து எடுக்க வேண்டிய ஒரு காட்சியை எடுக்க இயக்குனர் திட்டமிட்ட நிலையில் மம்முட்டி படப்பிடிப்புக்கு காலை 6.30 மணிக்கு தயாராகி வந்துவிட்டார்.

ஆனால் அப்பாஸ் எட்டு மணிக்கு மேலாகியும் வரவில்லை. மிகவும் சவகாசமாக அவர் வந்த போது இதை பார்த்து எனக்கு செம்ம கோவம் வந்துருச்சு. உடனே அவர் வந்ததும் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இருக்கீங்க என கேட்டேன். அதற்கு அப்படித்தான் வர முடியும் என்று அவர் திமிரா பதில் சொன்னதும் கோபத்தில் அடிக்க போயிட்டேன். பாலகிருஷ்ணா உண்மையிலேயே அடிச்சிட்டாரு. அதுக்கப்புறம் கொஞ்ச நாள் ஒழுங்கா வந்து அப்பாஸ் பிறகு தம் அடிக்க போயிட்டு ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் லேட்டா வருவாரு. அந்த மாதிரி அவர் படப்பிடிப்பில் திமிராகவும் அசால்ட் ஆகவும் நடந்து கொள்ளுவார் என்று பாவா லட்சுமணன் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

1 மணத்தியாலம் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

1 மணத்தியாலம் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

2 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

2 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

2 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

2 மணத்தியாலங்கள் ago