ஐயோ காப்பாத்துங்க… கடல் அலையில் சிக்கி அலறித்துடித்த… கல்லூரி ஆசிரியை பரிதாப பலி… மேலும் சக ஆசிரியர் கடலில் மாயம்… சென்னையை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 15, 2026

Spread the love

சென்னை தாழங்குப்பத்தைச் சேர்ந்த 26 வயதான கலைச்செல்வி, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். மதிய உணவை முடித்த பிறகு, கலைச்செல்வி, நவீன், கார்த்தி மற்றும் கலைச்செல்வியின் தங்கை கவுசல்யா ஆகியோர் தாழங்குப்பம் கடற்கரைக்குச் சென்று நேரத்தைச் செலவிட்டுள்ளனர்.

கடற்கரையில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக வந்த ராட்சத கடல் அலையில் அவர்கள் சிக்கிக்கொண்டனர். இதனைக்கண்ட அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாகக் கடலில் குதித்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீவிர போராட்டத்திற்குப் பிறகு கலைச்செல்வி மீட்கப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்பட்டார்.

   

எனினும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட கலைச்செல்வி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மற்றொரு ஆசிரியரான நவீன் கடலில் மாயமான நிலையில், அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.