கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்து வந்தார். அதே கல்லூரியில் ரெட்டிசாவடி பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவி ஒருவரும் மூன்றாம் வருடம் படித்து வருகிறார். இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு பிறகு தோழிகளாகி இருந்து வந்தார்கள். நாளடைவில் இவர்கள் இருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த 18 வயது மாணவியின் அண்ணன் தன்னுடைய தங்கையை கண்டித்ததோடு இது குறித்து 20 வயது மாணவியின் அண்ணனிடம் கூறி அறிவுரை சொல்லுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் 18 வயது மாணவி 20 வயது மாணவியிடம் பேசாமல் இருந்து வந்ததால் தன்னோடு பேசாவிட்டால் நாம் இருவரும் ஒன்றாக இருந்த போது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார் 20 வயது மாணவி. இதனால் னமுடைந்து போன 18 வயது மாணவி தன்னுடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த காவல் துறையினர் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள் .மேலும் தற்கொலை செய்து கொண்ட மாணவி எழுதி வைத்த கடிதத்தையும் கைப்பற்றிள்ளார்கள். அதில் தன்னுடைய உயிரிழப்பிற்கு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட மாணவிதான் காரணம் என்று கூறிய நிலையில் அந்த மாணவியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
