கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக நாகேஸ்வர் என்பவர் பணியாற்றி வருகின்றார். இவர் அதே கல்லூரியில் படிக்கும் மாணவியுடன் நட்பாக பழகி வந்த நிலையில் மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவரை பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த விஷயத்தை யாரிடமாவது வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மாணவியை மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன மாணவி இது பற்றி யாரிடமும் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நாகேஷ்வர் மாணவியை தொடர்ந்து மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக இந்த சம்பவம் தொடர்ந்து நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஆசிரியரின் தொல்லை தாங்க முடியாமல் அந்த மாணவி தன்னுடைய பெற்றோரிடம் நடந்த சம்பவங்கள் பற்றி கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் இது பற்றி போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகேஸ்வரி கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
