“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

By Devi Ramu on புரட்டாதி 4, 2026

Spread the love

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம் சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி தனது தந்தையின் நண்பரான தமிழ்ச்செல்வன் என்பவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி, பீரோவில் இருந்த 9 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளார்.

நகைகள் காணாமல் போனது குறித்து தமிழ்ச்செல்வன் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகாரளித்தார். காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், வீட்டிற்கு வந்து சென்ற கல்லூரி மாணவி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் நகைகளைத் திருடியதை ஒப்புக் கொண்டார்.

   

திருடிய 9 பவுன் நகைகளை பொள்ளாச்சியில் உள்ள நகைக் கடையில் சுமார் 2.50 லட்ச ரூபாய்க்கு விற்று, அந்தப் பணத்தில் மக்கினாம்பட்டியைச் சேர்ந்த தனது காதலனுக்குப் புதிய இருசக்கர வாகனம் வாங்கித் தந்ததாக மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து மாணவியைக் கைது செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை பெண்கள் சிறையில் அடைத்தனர். காதலனுக்காகக் கல்லூரி மாணவி திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.