ஐயோ பாவம்… ஸ்கூட்டர் மீது சிமெண்ட் லாரி மோதி… கல்லூரி மாணவி கொடூர பலி… கதறி அழுத தாய்… பெங்களூரூரை உலுக்கிய சோகம்…!

By Swetha on புரட்டாதி 24, 2026

Spread the love

பெங்களூரு நகரின் புறநகர்ப் பகுதியான ஆனேக்கல் பகுதியில், ஹோசூர் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது சிமெண்ட் லாரி மோதிய விபத்தில் 20 வயது கல்லூரி மாணவி உயிரிழந்தார். இறந்துபோன மாணவி ஹோம்பலகட்டா கிராமத்தைச் சேர்ந்த இன்சரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பிசிஏ படித்து வந்ததோடு, தினமும் தனது இருசக்கர வாகனத்திலேயே கல்லூரிக்குச் சென்று வந்துள்ளார்.

சம்பவத்தன்று இன்சரா வழக்கம் போல் கல்லூரி வகுப்புகளில் கலந்து கொண்டுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஹோசூர் சாலையில் உள்ள சவேரா டீ ஸ்டால் அருகே வந்தபோது, பின்னால் வந்த சிமெண்ட் லாரி இவரது வாகனம் மீது பலமாக மோதியது. லாரி ஓட்டுநரின் அலட்சியப் போக்கே இந்த விபத்துக்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

   

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இன்சாரா உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஆனேக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஆனேக்கல் காவல்துறையினர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.