உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த பி.ஏ முதலாண்டு கல்லூரி மாணவி ஒருவர், தனது வீட்டின் அருகே வரட்டிகளுக்காக எருமை எருவைச் சேகரிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த கிராமத்தைச் சேர்ந்த சுசீல், அஜய், குல்லோ, சோட்டு மற்றும் அவர்களது நண்பர்கள் 2 பேர் என மொத்தம் 6 பேர் சேர்ந்து அந்த மாணவியைக் கடத்திச் சென்றுள்ளனர்.
அடர்ந்த பகுதிக்கு இழுத்துச் சென்ற அந்த 6 மிருகங்களும், கல்லூரி மாணவியைக் கொடூரமான முறையில் கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்துள்ளனர். அதுமட்டுமின்றி, அக்கொடூரச் செயலைத் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து, வெளியில் சொன்னால் உயிரோடு கொன்று விடுவோம் என்றும், வீடியோவைப் பரப்பி விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
முன்பே இக்காவாலிகள் அத்துமீறியபோது தட்டிக்கேட்ட மாணவியை மிரட்டி வந்த நிலையில், தற்போது அரங்கேறிய இக்கொடூரத்தால் மீள முடியாத அதிர்ச்சியும் அவமானமும் அடைந்த அந்த மாணவி, வீட்டிற்கு வந்தவுடன் வீட்டில் இருந்த நச்சுப் பொருளைக் குடித்துத் துடிதுடித்துத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஜான்சி போலிஸார் 5 பேரைக் கைது செய்து, தப்பியோடிய எஞ்சிய காவாலிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
