“அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க”…. மாலை 6.10 மணிக்கு வந்த அந்த ஒரு மெசேஜ்… பதறியடித்து ஓடிய நண்பன்… வீட்டிற்குள் காத்திருந்த கொடூர அதிர்ச்சி….!

By Nanthini on ஆனி 16, 2026

Spread the love

தூத்துக்குடியைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவர் சுரேஷ், தனது நண்பருக்கு உருக்கமான குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவர், கல்லூரி விடுமுறை நாளான நேற்று மாலை தனது நண்பர் காளிராஜுக்கு, “என்னுடைய அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க… எல்லாரும் ஹாப்பியா இருங்க…” என வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பரும் உறவினர்களும் உடனடியாக அவரது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, சுரேஷ் தனது வீட்டில் மின்விசிறி கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அவரை இறக்கிப் பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கயத்தாறு காவல்துறையினர், மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளம் வயதிலேயே மாணவர் சுரேஷ் இந்த விபரீத முடிவை எடுத்ததற்கான காரணம் என்னவென்று உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து கயத்தாறு போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து, மாணவனின் தற்கொலைக்கான பின்னணி மற்றும் தீவிரக் காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.