திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் இயங்கி வரும் அரசு நிதி உதவி பள்ளியான ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று தமிழக அரசின் சார்பாக 11ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் கலந்து கொண்ட பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ வேலு மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவசவுந்திரவள்ளியும் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டபோது மாவட்ட ஆட்சியரும் காரில் ஏற முற்பட்டார். அப்போது இதே பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி மாவட்ட ஆட்சியரிடம் வந்து “மேடம் எனக்கு சின்ன வயதிலிருந்து கலெக்டர் ஆக வேண்டும் என்று ஆசை. உங்களுடைய கார் சீட்டை தொட்டு பார்க்கட்டுமா? என்று கேட்டுள்ளார். இதனால் நெகிழ்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் தொட்டு எல்லாம் பார்க்க வேண்டாம். உட்கார்ந்து பார்க்கலாம் என்று கூறி மாணவியை தன்னுடைய காரில் இருக்கையில் அமரச் செய்து ஊக்கப்படுத்தி உள்ளார் ..அந்த மாணவி காரின் இருக்கையில் அமர்ந்து கூச்சத்தோடு காணப்பட்டார். அதற்கு ஆட்சியர் “நல்ல கெத்தா உட்காருமா அப்போதான் உனக்கு நல்ல படிச்சு என்ன மாதிரி கலெக்டர் ஆகணும்னு தோணும். வாழ்க்கையில் நீயும் கலெக்டராக வரும்போது எனக்கு ஃபோட்டோ எடுத்து அனுப்பனும்” என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…