12 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு வெற்றி…. 7 ஆவது அமரன் செய்துள்ள நாள் வசூல்..?

By Soundarya on கார்த்திகை 7, 2024

Spread the love

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் அமரன். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

3 நாட்களில் 100 கோடியை கடந்த அமரன்| Amaran crossed 100 crores in 3 days

   

இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினி, கமல், அஜித் மற்றும் விஜய் போன்ற பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது .

   

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் முகுந்தின் மனைவியாக சாய் பல்லவி நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் தற்போது அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

 

தொடர்ந்து வசூலை குவிக்கும் 'அமரன்'...இத்தனை கோடியா ! | 'Amaran' continues to accumulate collections...so many crores!

இந்நிலையில், முதல் 7 நாட்களில் 168 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் இதுவரை அடையாத வெற்றியை இப்படம் கொடுத்துள்ளது. நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து, தொடர்ந்து வாய்ப்புகளை தேடி அலைந்து 2012ல் சினிமாவிற்குள் நுழைந்த SK பலன் சறுக்கல்களுக்கு பிறகு முழுமையான வெற்றிப்பாதை அமரனில் தான் அமைந்திருக்கிறது.