விஜய் எதிர்ப்பில் ‘Master Plan’ போட்ட EPS… நடுவழியில் ஷாக் கொடுத்த TTV தினகரன்… தமிழக அரசியலில் அடுத்த டுவிஸ்ட்….!

By Nanthini on ஆவணி 31, 2026

Spread the love

தமிழக அரசியலில் டிவிவி தினகரனுடன் கூட்டணி அமைத்து தவெக தலைவர் விஜய்யை எதிர்கொள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது இரு தலைவர்களுக்கும் இடையே மீண்டும் பனிப்போர் வெடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தருமபுரியில் அமமுக நிர்வாகிகள் பலரை அதிமுகவில் இணைக்கும் வகையில் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றை எடப்பாடி பழனிசாமி நடத்தியது டிவிவி தினகரனைப் பெரும் அதிர்ச்சிக்கும் கோபத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.

‘எதிரியை வீழ்த்த கைகோர்த்த நிலையில், தனது சொந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளையே எடப்பாடி தன்பக்கம் இழுப்பதா?’ என தினகரன் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருபுறம் அதிமுகவுக்குள் இருக்கும் உள்கட்சிப் பூசல்கள், மறுபுறம் கூட்டணிக் கட்சியான அமமுகவுடனான இந்த புதிய மோதல் என இரட்டைச் சவால்களை எதிர்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, இந்தச் சிக்கல்களை எப்படிச் சமாளித்து விஜய்யின் அரசியல் எழுச்சியைச் சந்திக்கப் போகிறார் என்பதே தற்போதைய அரசியல் களத்தின் மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.