kovai police

கோவை மக்கள் இனி அச்சமின்றி இருக்கலாம்… வைரலாகும் கமிஷனரின் வீடியோ…

By admin on கார்த்திகை 6, 2024

Spread the love

காவல்துறை உங்கள் நண்பன் என்று கூறுவார்கள். அதே போல் காவல்துறையினர் மக்களின் பாதுகாப்பாக இருப்பதற்கு தான் பணி செய்கிறார்கள். எந்தவொரு பிரச்சினை என்றாலும் முதன் முதலில் நாம் செல்லக்கூடிய ஒரு இடம் காவல் நிலையம்தான். ஆனால் ஒரு சில இடங்களில் தயக்கம் இருக்கும்.

   

மக்கள் எப்படி காவல்துறை அதிகாரிகளை சந்திப்பது முக்கியமான பிரச்சினைகளை எப்படி கமிஷனரின் பார்வைக்கு கொண்டு செல்வது என பல குழப்பத்தில் இருப்பார்கள். சில நேரத்தில் பிரச்சனையின் தன்மைக்கு ஏற்ப நடவடிக்கை தாமதமாகலாம். கமிஷரை பார்க்க வேண்டும் என்று விரும்புவர்களுக்கு கோவை மாநகர காவல் ஆணையாளர் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

   

அதில் கோவை மாநகர மக்கள் இனி அச்சமின்றி இருக்கலாம். என்னை நேரடியாக சந்திக்க வேண்டும் என்று விரும்புவர்கள் தினமும் மதியம் 12 மணியிலிருந்து 2 மணி வரை நேரடியாக அலுவலகத்திற்கு வந்து என்னை சந்திக்கலாம்.

 

யாரேனும் நடுவில் எனக்கு கமிஷனரை தெரியும் நான் நண்பர் அப்படின்னு சொன்னால் யாருடைய பேச்சையும் நம்பாதீர்கள் நேரடியாக என்னிடம் வந்து பெட்டிஷன் கொடுக்கலாம் ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் சொல்லலாம் அதை தாண்டி மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனை என்றால் எந்த நேரத்தினாலும் எங்களை அழைக்கலாம்.

நேரில் வர முடியாதவர்கள் 100 என்ற எண்ணில் கூப்பிட்டு சொல்லலாம் அல்லது காவல் உதவி என்ற செயலி வைத்திருக்கிறோம். அல்லது நம் கமிஷனர் ஆபீசின் வலைதள பக்கத்தில் எதுவாக இருந்தாலும் நீங்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.