இனி ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்..? அமைச்சர் முக்கிய தகவல்…!!

By Soundarya on மார்கழி 21, 2025

Spread the love

தமிழக ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாகத் தேங்காய் எண்ணெய் விநியோகிப்பது குறித்துத் தமிழக அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது பாமாயிலுக்குப் பதிலாகத் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இது தேங்காய் விவசாயிகளுக்கு உதவும்.

தற்போது பாமாயிலுக்கு வழங்கப்படும் மானியம் (சுமார் ₹100) போலவே, தேங்காய் எண்ணெய்க்கும் மானியம் வழங்கப்பட்டால், அதன் விலை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி உறுதி அளித்துள்ளார்