குட் நியூஸ் மக்களே..! ரேஷன் கடைகளில் புதிய பொருள்… அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு..!

By Soundarya on மார்கழி 17, 2025

Spread the love

தமிழக ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்ற தென்னை விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்கும் திட்டம் தற்போது தமிழக அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தனியார் ஊடகப் பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் பாக்கெட்டுகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மொத்த விலையில் பாதித் தொகையை (50%) அரசே மானியமாக ஏற்கவும், மீதித் தொகையை மட்டும் மக்களிடம் வசூலிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், தேங்காய்க்கான நியாயமான விலை கிடைப்பதுடன் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.