நம் அன்றாட வாழ்வில் அடிக்கடி ஏற்படக்கூடிய சில உடல் நலக் குறைவுகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்வதால் பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. அப்படி ஒரு சம்பவம் கம்போடியாவில் நடந்துள்ளது. கம்போடியாவில் உள்ள புனோம் பென்னில் வசிக்கக்கூடிய சிறுவன் ஒருவன் தொடர்ச்சியாக காது வலி மற்றும் விசித்திரமான சத்தம் கேட்பதாக கூறியுள்ளார். உடனே குடும்பத்தினர் திருவிடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முதலில் மருத்துவர்கள் இதை ஒரு சாதாரண காது வலி என்று நினைத்துக் கொண்டனர்.
பிறகு ஆழமாக பரிசோதித்த போது குழந்தையின் காதுக்குள் ஒரு உயிருடன் இருக்கும் கரப்பான் பூச்சி சுருண்டு நகர்வதை மருத்துவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பூச்சி இன்னும் உயிருடன் இருந்ததால் அதனை வெளியே எடுப்பது மிகவும் சவாலானதாக இருந்தது. மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ செயல்முறையின் மூலம் அந்த கரப்பான் பூச்சி அகற்றப்பட்டது. இந்த சம்பவம் சிறுவர்களின் உடல்நல குறைகளை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்பதை பெற்றோர்களுக்கு நினைவூட்டுகிறது. தற்போது இந்த சம்பவம் இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
