“ப்ளீஸ் விட்ருங்க சார்…” மாணவியை அறைக்குள் அடைத்து பலாத்காரம் செய்த பயிற்சியாளர்…. கதறிய மாணவி…. பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 31, 2025

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் பிள்ளைத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப். இவர் ராமன்புதூர் பகுதியில் இருக்கும் டேக்வாண்டோ பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக வேலைக்கு சேர்ந்தார். ஒரு சில பள்ளிகளிலும் பிரதீப் பகுதிநேர டேக்வாண்டோ பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 11, 12-ம் தேதி மதுரையில் ஸ்கூல் கேம்ஸ் டெக்ரேசன் அமைப்பு டேக்வாண்டோ போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அதற்கு குமரிலிருந்து பள்ளி மாணவிகளை பிரதீப் அழைத்து சென்றுள்ளார். போட்டி முடிந்து மாணவிகளை பெற்றோருடன் அனுப்பிய பிரதீப் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை மட்டும் மற்றொரு மேட்ச் இருப்பதாக கூறி அறையில் தங்க வைத்தார். பின்னர் பிரதீப் அந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

   

வீடு திரும்பிய மனைவி தனது பெற்றோரிடம் நடந்துவற்றை அழுது கொண்டே கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அறிந்த பிரதீப் அச்சத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.