நர்ஸ் கொலையில் திடீர் திருப்பம்…! “நிர்வாண கோலம்…” கழுத்தை நெரித்து கொன்ற சக ஊழியர்…. நகைக்காக அரங்கேறிய பயங்கரம்…. குலை நடுங்க வைக்கும் பின்னணி…!!

By Devi Ramu on ஐப்பசி 20, 2026

Spread the love

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே 4 சவரன் நகைக்காகப் பெண் நர்ஸ் உத்திரா (26) என்பவரைக் கொடூரமாகக் கொலை செய்து, காவல் துறையினரைத் திசைதிருப்ப அவரது ஆடைகளைக் களைந்து எறிந்ததாக மருத்துவமனை ஊழியர் சரவணன் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றி வந்த உத்திராவை, உடன் வேலை பார்த்த சரவணன் பெருந்துறையில் இறக்கிவிடுவதாக நம்ப வைத்துப் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதியில் வைத்து அவரது கழுத்தை நெரித்துக் கொன்று, அவர் அணிந்திருந்த 4 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துள்ளார்.

   

காவல்துறையினருக்கு நகைக்காக நடந்த கொலை என்ற சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக உத்திராவின் உடைகளைக் களைந்து வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளார். சிசிடிவி காட்சிகள் மற்றும் தொடர் விசாரணையின் மூலம் கொடூரன் சரவணனை அதிரடியாகக் கைது செய்த ஊத்துக்குளி காவல் துறையினர் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.