11 மாதம் கட்டுங்க, 1 மாதம் இலவசம்… கோ-ஆப்டெக்ஸ் கொண்டுவந்த சூப்பர் தீபாவளி சேமிப்புத் திட்டம்… 30% தள்ளுபடியுடன் குவியும் புத்தம் புதிய ஆடைகள்….!

By Nanthini on ஐப்பசி 12, 2026

Spread the love

தமிழ்நாடு அரசின் மாபெரும் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ், கடந்த 91 ஆண்டுகளாக நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பாரம்பரியமிக்க ரகங்களைச் சந்தைப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் அனைத்து விற்பனையகங்களிலும் 30 சதவீதம் வரை சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், சேலம், கோவை மென்பட்டு சேலைகள் மற்றும் ஆரணி, தஞ்சை பட்டுச் சேலைகளுடன், நவீன கால இளைஞர்களைக் கவரும் வகையில் பிரிண்டட் சட்டைகள், குர்த்தீஸ்கள், பாலிரயான் எம்ப்ராய்டரி உடைகள், பலாசோ செட்கள், காட்டன் ஸ்லப் மற்றும் கலம்கரி ரகங்கள் எனப் புதுமையான கலக்கலான ஆடைகள் ஏராளமான அளவில் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டுள்ளன.

புதிய வடிவமைப்புடன் கூடிய சிறுமிகளுக்கான பட்டுப் பாவாடை சட்டைகள், லினன் ஆடவர் சட்டைகள், ரிங்க்கிள் சேலைகள் மற்றும் ஸ்லிம்ஃபிட் ரெடிமேட் ஆடைகளும் இந்த ஆண்டு கூடுதல் சிறப்பம்சமாக இடம்பெற்றுள்ளன. பாரம்பரியமும் நவீனமும் சங்கமிக்கும் இந்தத் துணிகள் பண்டிகைக் காலக் கொண்டாட்டத்திற்கு மெருகூட்டும் வகையில் அமைந்துள்ளன. மக்கள் தங்களின் குடும்பத்துடன் சென்று தங்களுக்குப் பிடித்தமான ஆடைகளை எளிதில் வாங்கும் வகையில் இந்தச் சலுகைகள் மற்றும் புதிய வரவுகள் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் பிரத்யேகமாக வைக்கப்பட்டுள்ளன.

   

தீபாவளிப் ஷாப்பிங்கை எளிதாக்கும் விதமாக கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் புதிய மாதாந்திரச் சேமிப்புத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ. 300 முதல் ரூ. 3,000 வரை மாதத் தவணை நிர்ணயிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில், வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக 11 மாதங்கள் மட்டுமே பணம் செலுத்த வேண்டும். மீதமுள்ள 12 ஆவது மாதத்துக்கான தவனைத் தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே செலுத்தும் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுங்கள்!