தமிழகத்தின் புதிய பட்ஜெட் தாக்கலுக்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போதே விறுவிறுப்படைந்துள்ளன. இது தொடர்பாக, வரும் ஜூலை 2-ஆம் தேதி முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை துறை வாரியாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் விரிவான ஆலோசனை நடத்தவுள்ளார். நிர்வாக வசதிக்காகவும், ஆழமான விவாதங்களுக்காகவும் நாள்தோறும் காலையில் ஒரு துறை, மாலையில் ஒரு துறை என பிரிக்கப்பட்டு இந்த ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை அனைத்து அரசுத் துறைகளுக்கும் ஏற்கனவே அனுப்பப்பட்டு, அதிகாரிகள் கூட்டத்திற்கான தயாரிப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மிக முக்கிய அம்சமாக, நேர மேலாண்மைக்கும் தெளிவான விளக்கங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையின் செயல்பாடுகள், தேவைகள் மற்றும் முக்கிய அம்சங்களை முதலமைச்சருக்கு சுருக்கமாகவும் விளக்கமாகவும் எடுத்துரைக்க ஏதுவாக, 20 ஸ்லைடுகளுக்கு மிகாமல் பவர்பாயிண்ட் பிரசன்டேஷன் தயார் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற தகவல்களைத் தவிர்த்து, மக்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கும், துறையின் வளர்ச்சிக்கும் தேவையான முக்கிய கோரிக்கைகளை மட்டுமே இதில் முன்னிலைப்படுத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
