FLASH NEWS: முதல்வர் விஜய் அறையை மாற்ற ரூ.5 கோடியில் டெண்டர்… தலைமைச் செயலகத்தில் பரபரப்பு….!

By Nanthini on ஆவணி 13, 2026

Spread the love

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் இயங்கிவரும் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது செயலாளர்களின் அலுவலக அறைகளை, வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவதற்காக ரூ.5 கோடி மதிப்பீட்டில் அரசு சார்பில் அதிகாரப்பூர்வ டெண்டர் கோரப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்படவுள்ள இந்த புதிய அலுவலகத்தில் அதிநவீன கட்டமைப்பு வசதிகளும், பிரத்யேகப் பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெறவுள்ளதாகத் தெரிகிறது.

இந்தப் புதுப்பித்தல் மற்றும் இடமாற்றப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த பிறகு, முதலமைச்சர் விஜய் அவர்கள் நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைக்கப்படும் புதிய அலுவலக அறையிலிருந்தே தனது அரசுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.