“CM விஜய்யின் ‘Plan 109’… கூட்டணியில் இருந்து தூக்கப்படுகிறதா முக்கிய கட்சி?…. இடைத்தேர்தலில் யாரும் எதிர்ப்பார்க்காத அதிரடி டுவிஸ்ட்….!

By Nanthini on புரட்டாதி 13, 2026

Spread the love

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என முதலமைச்சர் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்குக் கறாராக அறிவுறுத்தியுள்ளார். இந்த இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றினால் மட்டுமே தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 109 ஆக உயரும் என்ற நிலையில், அதற்கான வியூகங்கள் தீவிரமாக வகுக்கப்பட்டு வருகின்றன.

இந்த முக்கிய எண்ணிக்கையை எட்டிவிட்டால், கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தொடர்ந்து சார்ந்திருக்க வேண்டிய அவசியமின்றி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மட்டுமே ஆட்சியைத் தடையின்றி நகர்த்திவிடலாம் என்பதே முதலமைச்சர் விஜய்யின் தற்போதைய பிரதான அரசியல் மற்றும் தேர்தல் கணக்காக அமைந்துள்ளது.