சற்றுமுன்: ‘CM விஜய் ராஜினாமா?’… பெரும் பரபரப்பு… தமிழக அரசைக் கிழித்து தொங்கவிட்ட எச்.ராஜா…!

By Nanthini on ஆனி 16, 2026

Spread the love

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகக் கூறி, அதற்குப் பொறுப்பேற்று தமிழக முதல்வர் விஜய் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா ஆவேசமாக வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதேபோன்றதொரு சூழலில் தான் இருந்திருந்தால் உடனடியாகத் தனது பதவியைத் துறந்திருப்பேன் என்றும் சாடினார்.

முன்னதாக, தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த எச். ராஜா, நிர்வாகத் திறனற்ற தமிழக வெற்றிக் கழக அரசால் மாநிலத்தில் நாள்தோறும் பெண்களும் குழந்தைகளும் சொல்லொணாத் துயரங்களுக்கும் அவதிக்கும் உள்ளாகி வருவதாகக் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், தமிழகத்தில் இது போன்ற வன்கொடுமைகளும் அசாம்பாவிதங்களும் இனிவரும் காலங்களில் தொடராத வண்ணம் அரசு உடனடியாகக் கடுமையான மற்றும் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது பதிவின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.