தமிழ்நாட்டில் சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது சாமானிய நடுத்தர மக்களின் மிக முக்கியமான வாழ்நாள் கனவாகும். ஆனால், அதற்கான கட்டிட அனுமதி (Building Approval) பெறுவதில் ஏற்படும் காலதாமதமும், அரசு அலுவலகங்களுக்கு அலைவதும் பலரையும் சோர்வடையச் செய்து வந்தது. மக்களின் இந்த நீண்ட நாள் குறையைப் போக்கும் வகையிலும், கட்டுமானத் துறையை மேம்படுத்தும் வகையிலும் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு தற்போது ஒரு அதிரடி சீர்திருத்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இனிவரும் காலங்களில் வீடு மற்றும் வணிகக் கட்டிடங்களுக்கான திட்ட அனுமதிகளை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் கட்டாயமாக வழங்க வேண்டும் என்பதே இந்த அறிவிப்பின் சாராம்சமாகும்.
பொதுமக்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கும் கட்டிட அனுமதி விண்ணப்பங்கள் அனைத்தும், ‘முதலில் வருவோருக்கு முதலில்’ (First Come, First Served) என்ற முன்னுரிமை அடிப்படையிலேயே பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்ட ஐந்து வேலை நாட்களுக்குள் (5 Working Days) சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள், கட்டிடம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்திற்கு நேரில் சென்று தங்களின் கல ஆய்வை (Field Inspection) எவ்வித காலதாமதமும் இன்றி கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் விண்ணப்பங்களை மாதக்கணக்கில் நிலுவையில் வைக்கும் அதிகாரிகளின் போக்கிற்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறையின்படி, விண்ணப்பித்த 24 நாட்களுக்குள் அனைத்து விதமான திட்ட மற்றும் கட்டிட அனுமதிகளும் முழுமையாக ஆன்லைன் (Online Approval) மூலமாகவே வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு காலக்கெடு விதித்துள்ளது. இதில் மிக முக்கியமாக, விண்ணப்பதாரர்களிடம் இருந்து எவ்விதமான அச்சிடப்பட்ட காகித ஆவணங்களையோ அல்லது கூடுதல் நகல்களையோ அதிகாரிகள் நேரில் கோறக்கூடாது என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முழுமையான டிஜிட்டல் நடைமுறையானது, தமிழ்நாட்டின் 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட நகரங்களில் வாழும் எளிய நடுத்தர மக்கள் இடைத்தரகர்களின் இன்றி தங்களின் மொபைல் அல்லது கணினி மூலமாகவே அப்ரூவல்களைப் எளிதாகப் பெற்றுக் கொள்ள வழிவகை செய்கிறது.
கட்டுமான அனுமதிகளில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, உயர் அதிகாரிகள் தங்களின் நேரடி கண்காணிப்பில் இந்த செயல்முறையை கொண்டு வந்துள்ளனர். இந்த புதிய டிஜிட்டல் நடைமுறையில் லஞ்ச ஊழலைத் தடுக்கும் விதமாக, விதிகளை மீறி பொதுமக்கள் அல்லது விண்ணப்பதாரர்கள் யாரேனும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள் அல்லது பொறியாளர்களை அலுவலகங்களில் நேரடியாகத் தொடர்பு கொண்டால், அவர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. சிஸ்டம் மூலமாக மட்டுமே விண்ணப்பங்கள் நகரும் என்பதால், எவ்விதமான முறைகேடுகளுக்கும் இதில் இடமிருக்காது என்றும், சாமானிய மக்களின் தேவையற்ற அலைச்சல்கள் முற்றிலுமாக ஒழியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
