லண்டனில் முதல்வர் விஜய் தங்கியுள்ள நட்சத்திர விடுதி… ஒருநாள் வாடகை மட்டும் எவ்வளவு தெரியுமா?… கேட்டா தலையே சுத்திடும் போலையே….!

Spread the love

தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் 6 நாள் அதிகாரப்பூர்வப் பயணமாக லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய், அங்குள்ள புகழ்பெற்ற ‘தி ஷார்ட்’ (The Shard) நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். ஐரோப்பாவின் மிக உயரமான கட்டடங்களில் ஏழாவது இடத்தில் இருக்கும் இந்த விடுதியிலிருந்து ஒட்டுமொத்த லண்டன் நகரத்தின் அழகையும் ரசிக்க முடியும். இங்குள்ள அறைகளின் ஒரு நாள் வாடகை இந்திய மதிப்பில் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1.60 லட்சம் வரை மாறுபடுகிறது. மேலும், பிரம்மாண்ட உணவகங்கள் மற்றும் மிக உயரத்தில் அமைக்கப்பட்ட நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் இந்த விடுதியில் இடம்பெற்றுள்ளன.

முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளப்படும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பதால், இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த லண்டன் பயணத்தின் போது, பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்குவது மற்றும் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக விரிவான ஆலோசனைகள் நடத்தப்படவுள்ளன. இதன் மூலம் மாநிலத்தில் புதிய வேலைவாய்ப்புகளும் உள்கட்டமைப்பு வளர்ச்சியும் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பயணத்தின் ஒரு பகுதியாக, உலகப் புகழ்பெற்ற ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’ (Silverstone Motor Racing Circuit) பந்தய மைதானத்தை நேரில் சென்று பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு, விளையாட்டு சார்ந்த சுற்றுலா மற்றும் சிறப்பு வாகனத் தொழில்நுட்பங்களின் சிறந்த நடைமுறைகளைக் கண்டறிந்து, அவற்றை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதே இதன் முதன்மை நோக்கமாகும்.

Nanthini

Recent Posts

வங்கக்கடலில் உருவாகும் புது புயல் சின்னம்…. 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் லெவல்’ மஞ்சள் அலர்ட்… 18 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை…..!

வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்…

2 minutes ago

கடவுளே…! சட்டென நெஞ்சில் பாய்ந்த இரும்பு ஆணி… திடீரென சரிந்து விழுந்த ஒயின் ஷாப் ஊழியர்… பதைப்பதைக்கும் வைரல் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள ஒயின் ஷாப் ஒன்றில், பிரஷர் கன் மூலம் பாய்ந்த இரும்பு ஆணி…

3 minutes ago

“சரத் பவாருக்கு ஓய்வு… சுப்ரியாவுக்கு மத்திய அமைச்சர் பதவி?”….. மோடி அடித்த ஒற்றை போன் கால்… பின்னணியில் மாபெரும் ‘டீல்’….!

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…

6 minutes ago

“தலையில்லாமல் நிர்வாணமாக கிடந்த உடல்…” தனியாக அழைத்து சென்ற சக ஊழியர்… வாலிபர் கொலையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரின் தலையைத் துண்டித்து மயானத்தில்…

13 minutes ago

அட கடவுளே… 8 மாசமா சம்பளம் இல்ல… அப்புறம் பிச்சை எடுக்காம என்ன பண்றது?… கையில் பிச்சை பாத்திரத்துடன்… வீதியில் இறங்கிய அரசு பெண் அதிகாரி… இணையத்தில் வைரல்…!!

பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…

24 minutes ago

“வீட்டில் மகளுடன் இருந்த தொழிலாளி…” தனியாக அழைத்து சென்று முதலாளி செய்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…

27 minutes ago