கோவையில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக முதல்வர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். நூல் பரிந்துரைக் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் பெருமாள் முருகன் இதனை அம்பலப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பெரியார் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளையடிப்பதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
தங்கள் தான் தமிழ் மொழியைக் காப்பாற்றுவதாகவும், தமிழ் இலக்கியங்களின் முழு உரிமையாளர்கள் தாங்கள் மட்டுமே என்றும் தம்பட்டம் அடிக்கும் திமுக, எப்போதும் ஊழலின் ஊற்றுக்கண்ணாகவே செயல்பட்டு வருவதாக விஜய் தனது எக்ஸ் பதிவில் சாடியுள்ளார். நகராட்சித் துறை, டாஸ்மாக் மற்றும் டெண்டர்கள் தொடங்கி, தற்போது மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த பள்ளிக் கல்வித் துறை மற்றும் புதிய நூலகங்கள் வரை அனைத்து இடங்களிலும் ஊழல் வியாபித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகத்தை ‘ஊழல் உலகமாக’ திமுக மாற்றியுள்ளதாகக் கூறியுள்ள விஜய், பார்த்துப் பார்த்துத் தரமற்ற நூல்களைப் பரிந்துரை செய்து முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதை உலகமே கைகொட்டிச் சிரிப்பதாகத் தெரிவித்துள்ளார். மக்களின் வரிப்பணத்தை முறைகேடு செய்யும் இத்தகைய செயல்களால், தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் குடும்பங்களும் திமுகவை மன்னிக்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பெரியார் மற்றும் தமிழின் பெயரைக் கூறிக்கொண்டு தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வரும் திமுக, இனி மக்கள் மன்றத்தில் எக்காலத்திலும் தலைநிமிர முடியாத அளவுக்கு நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கும் என்று விஜய் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கும் இந்த முறைகேடுகள் அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
