“கால் வலிக்குதாப்பா?”… மேடையை விட்டு இறங்காமல் கேமராமேன்களிடம் அன்பு காட்டிய CM விஜய்… அனைவரையும் ஆச்சரியப்படுத்திய முதலமைச்சர்…!!

By Gayathri on ஆவணி 15, 2026

Spread the love

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையில், சென்னை கிண்டியில் ‘வெற்றி தமிழ்நாடு’ என்ற பெயரில் மாபெரும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்வேறு தொழிலதிபர்களுடன் அவர் தொடர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, மாநாட்டு நிகழ்வுகளைக் காலை முதலே ஓய்வின்றி நின்று படம் பிடித்துக் கொண்டிருந்த புகைப்படக் கலைஞர்களையும் கேமராமேன்களையும் கவனித்த முதலமைச்சர், அவர்களைப் பார்த்து “கால் வலிக்குதாப்பா?” என்று மிகவும் அன்போடு நலம் விசாரித்தார். முதலமைச்சரின் இந்த எதிர்பாராத, அக்கறையான செயல் அங்கிருந்த ஊடகத்துறையினர் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகத்தின் 12-வது முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள அவர், மாநிலத்தின் தொழில் வளத்தை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதில் அதிக தீவிரம் காட்டி வருகிறார். தவெக அரசு ஆட்சிக்கு வந்த 90 நாட்களுக்குள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள இந்த மாநாட்டில், 97 நிறுவனங்களுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் வாயிலாக ரூ.67,452 கோடி மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக உள்ளன. கடந்த மூன்று மாதங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களையும் சேர்த்தால், மொத்தமாக ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடுகளை மாநில அரசு ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

   

இந்த மாநாட்டில் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு நிறுவனங்களும் ஆர்வமுடன் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன. குறிப்பாக ஆவிட் குழுமம், எல் அன்ட் டி, ஜப்பானின் ஒய்கேகே, அக்னிகுல் காஸ்மோஸ், விக்ரம் சோலார், சுஜ்லான் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளன. இந்நிகழ்வில் புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிக்கப்பட்ட கட்டடங்களைத் திறந்து வைத்தும், தேர்வானவர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் முதலமைச்சர் விஜய் வழங்கினார்.