“கலங்காத ஸ்டாலினுக்குள் கலக்கம்?”…. செந்தில் பாலாஜி, வேலு, அன்பில் மகேஸ் துறைகளில் நடக்கும் அந்த ‘ட்விஸ்ட்’… தவெக அரசின் ‘ஆக்ஷன்’ லிஸ்ட்டால் திமுக-வில் அடுத்தடுத்து பரபரப்பு….!

By Nanthini on ஆனி 25, 2026

Spread the love

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முந்தைய திமுக ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களான செந்தில் பாலாஜி, எ.வ.வேலு மற்றும் அன்பில் மகேஸ் ஆகியோரின் துறைகளை இலக்கு வைத்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மின்துறையில் முறைகேடுகளை வெளிகொணரும் வகையில் வெள்ளை அறிக்கை தயாரிப்பு, பொதுப்பணித்துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் புகார்கள் மீதான விசாரணை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் எழுந்த லஞ்சக் குற்றச்சாட்டுகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் ஆகியவை இந்த புதிய அரசின் ஆரம்பகட்ட ஹைலைட்களாக மாறியுள்ளன.

இந்த தொடர் அதிரடி வேட்டைகளால் “திமுக எந்தக் காலத்திலும் எதற்கும் கலங்காது” என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மேடைகளில் தைரியமாக முழங்கினாலும், தவெக அரசின் இந்த வேகமான மற்றும் எதிர்பாராத நகர்வுகள் அவருக்குள் ஒரு தற்காலிக அதிர்ச்சியையும், அரசியல் ரீதியான கலக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகவே அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாகக் கவனிக்கின்றன.