தமிழக காவல்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் தற்போதைய ஹாட் டாபிக், லஞ்ச ஒழிப்புத்துறையின் கூடுதல் டிஜிபியாக இருந்த அருண் ஐ.பி.எஸ்.ஸின் அதிரடி இடமாற்றம் தான். பதவிக்கு வந்த சில வாரங்களிலேயே, அவர் அங்கிருந்து மாற்றப்பட்டு, ‘டம்மி போஸ்டிங்’ என்று கருதப்படும் ஊனமாஞ்சேரி பயிற்சி அகாடமிக்கு அனுப்பப்பட்டிருப்பது ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் சென்னை மாநகர காவல் ஆணையராக வலம் வந்த அருண், அன்றைய ஆளுங்கட்சியின் பவர் சென்டர்களுடன் மிகுந்த நெருக்கம் காட்டியவர் என்றும், தற்போதைய தவெக ஆட்சியில் ஒரு முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரியின் செல்வாக்கு மூலம் லஞ்ச ஒழிப்புத்துறைக்குள் நுழைந்தார் என்றும் அதிகார வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
இடமாற்ற பின்னணி குறித்து விசாரித்தபோது, திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதாக உறுதியளித்தே அருண் இப்பொறுப்பிற்கு வந்துள்ளார். ஆனால், நடைமுறையில் லஞ்ச ஒழிப்புத்துறையின் ரகசியத் தகவல்களும், திட்டமிடப்படும் அதிரடி நடவடிக்கைகளும் தொடர்ந்து திமுக தரப்பிற்கு கசிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீதான வழக்கில் எடுக்கப்படவிருந்த ரகசிய நடவடிக்கைகள் மற்றும் கைது திட்டங்கள் முன்கூட்டியே கசிந்த விவகாரம், அரசு தரப்பிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பிய எ.வ.வேலுவை விமான நிலையத்திலேயே கைது செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டிருந்த நிலையில், அந்த ரகசியத் தகவல் அவருக்கு முன்கூட்டியே பகிரப்பட்டதாகத் தெரிகிறது. அதோடு, கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவும், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ஆவணங்களுடன் கம்பீரமாகப் பேசி வழக்கை எதிர்கொள்ளவும் வேலுவுக்கு சில ‘ஆலோசனைகள்’ வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முதல்வர் விஜய்யிடம் சொல்லப்பட்ட கைது நடவடிக்கை ஏர்போர்ட்டில் அரங்கேறாததால், இது குறித்து முதல்வர் விசாரிக்கத் தொடங்கிய போதே உளவு கசிவு விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இறுதியாக, அருண் ஐ.பி.எஸ்.ஸை லஞ்ச ஒழிப்புத்துறையின் தலைவராக நீடிக்கச் செய்தால், திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான எந்தவொரு ஊழல் விசாரணையையும் நியாயமாக நடத்த முடியாது என்பதை உள்துறை செயலாளர் மணிவாசனும், டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலும் முதல்வர் விஜய்யிடம் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளனர். இந்தத் துல்லியமான உளவுத் தகவல்களின் அடிப்படையிலேயே, முதல்வர் விஜய் உடனடியாக அருணை அந்தப் பொறுப்பிலிருந்து தூக்கியடித்து, புதிய தலைவராக மகேஸ்வரி ஐ.பி.எஸ்.ஸை நியமிக்க உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…