கனிமவள கொள்ளைக்கு வேட்டு வைத்த CM விஜய்… நடுங்கும் மாஃபியாக்கள்… தமிழகம் முழுவதும் பறந்த அடுத்த அதிரடி உத்தரவு..!

By Nanthini on வைகாசி 30, 2026

Spread the love

தமிழகத்தில் கனிமவள கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் உள்ள 431 கல்குவாரிகளில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த ஆய்வின் போது, அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்டது கண்டறியப்பட்ட 67 கல்குவாரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கனிமவளத்துறை அமைச்சர் பிரபு தெரிவித்துள்ளார்.

மேலும், 78 இடங்களில் சட்டவிரோதமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதோடு, உரிய அனுமதியின்றி கனிமங்களை ஏற்றிச் சென்ற 469 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அரசின் இந்த அதிரடி நடவடிக்கை கனிமவள கடத்தல்காரர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.